தனித்திரு
தவமிரு
தன்னையறி
தரணி ஆள் .
சாமானியர்கள்
சாகும் வரம் பெற்றவர்கள்
எதற்கும் சளைக்காதவர்கள்
உலகை ஆளப்பிறந்தோர்
உறங்கிக் கிடைப்பதில்லை.
தெரியும் என்பதால்
நாக்கைத் தொங்கப் போடும்
மடமாந்தர் மத்தியில்
சாவித்துவாரமும்
தனிமை மறுக்கும்.
என் மொழி தெரியாதவர்க்கு
என்னை எப்படி தெரியும்
புலம்பாமல் புதிய மொழி
படிப்பது நானா?
அவர்களா?
காலையிலும் தேடுகிறேன்
மாலையிலும் தேடுகிறேன்
கதைக் கட்டுரையிலும்
காணவில்லை
என்னுள் இருப்பது
கண்ணாடியில் தெரியுமா .
கவிதை எழுதுவேன்
என்றேன் .
கதைக்காதே
காண்பிக்க வேண்டும்
என்றார்கள்.
வர்ர்தைகளே
கவிதை
என்று
வாழும் இவர்களுக்கு
கவிதைஉள்ளம்
எப்படிப்
புரியும்.
பொற்காசுத்
தலைப்புகளின்
தவிப்பல்ல
என் கவிதைகள்.
என் நிகழ்காலத்
தட்ப வெப்பத்தின்
தரிசனங்கள்.
அன்றைய
அறிவிப்புகளாய்
அழிந்திட
தேதியிடப் படாமல்
அன்றைய
நிகழ்வுகளாய்
வாசிக்கப்படும்
வரலாற்றுப்
பதிப்புகள்.