My Hit Status


View My Stats

Monday, October 4, 2010

காதல் கவிதை

கவிதை கேட்கின்றாயே
தேவி 
நான் என்ன 
கனவுகள் விற்பவனா ?
கவிதைகள் என் 
காதலின் வெளிப்பாடு 
கண்ணே என் 
கண்களும் 
காதல் சொல்லும் 
கவிதை போல் 
கவனித்துப் பார் என் 
காதல்
 கவிதையில் மட்டுமில்லை 
என்பது புரியும் .

Sunday, August 15, 2010

தனிமைத் தவம்

தனித்திரு 
தவமிரு 
தன்னையறி 
தரணி ஆள் .

உறக்கம்

சாமானியர்கள் 
சாகும் வரம் பெற்றவர்கள் 
எதற்கும் சளைக்காதவர்கள்
உலகை ஆளப்பிறந்தோர்
உறங்கிக் கிடைப்பதில்லை. 

தனிமை

தெரியும் என்பதால் 
நாக்கைத் தொங்கப் போடும் 
மடமாந்தர் மத்தியில்
சாவித்துவாரமும் 
தனிமை மறுக்கும்.

மொழி

என் மொழி தெரியாதவர்க்கு 
என்னை எப்படி தெரியும்  
புலம்பாமல் புதிய மொழி
படிப்பது நானா? 
அவர்களா?

தேடல்

காலையிலும் தேடுகிறேன்
மாலையிலும் தேடுகிறேன்
கதைக் கட்டுரையிலும்
காணவில்லை
என்னுள் இருப்பது 
கண்ணாடியில் தெரியுமா .

கவிதைஉள்ளம்

கவிதை எழுதுவேன் 
என்றேன் .
கதைக்காதே 
காண்பிக்க வேண்டும் 
என்றார்கள். 
வர்ர்தைகளே 
கவிதை
என்று
வாழும் இவர்களுக்கு
கவிதைஉள்ளம்
எப்படிப் 
புரியும். 

Tuesday, August 10, 2010

என் கவிதைகள்

பொற்காசுத்
தலைப்புகளின் 
தவிப்பல்ல 
என் கவிதைகள்.
என் நிகழ்காலத் 
தட்ப வெப்பத்தின் 
தரிசனங்கள்.
அன்றைய 
அறிவிப்புகளாய் 
அழிந்திட 
தேதியிடப் படாமல் 
அன்றைய 
நிகழ்வுகளாய் 
வாசிக்கப்படும் 
வரலாற்றுப் 
பதிப்புகள்.

Friday, July 9, 2010

பாரியை வென்றவள்

பாரியை வென்றவள்
தாலியை காக்க
தாலியையே அடகு
வைக்கும் பெண்.
கட்டிமுத்து. க. செ.

Tuesday, July 6, 2010

ஞானி

ஞானி
என்னை தேடி
என்னுள் கரைந்து
என்னை இழந்தேன்

கட்டிமுத்து.க.செ.

கொடை வள்ளல்

கொடை வள்ளல்
 தான எண்ணத்தையும்
தானம் செய்திட்டேன்
கேளாய் ! என்றான்
பிச்சைக்காரனிடம் .
கட்டிமுத்து. க . செ .

காந்தி தேசம்

காந்தி
பிறந்த
தேசமிது
மீந்திருப்போர்
காந்தியல்ல
அகிம்சை
ஆள்வதற்கு ...
கட்டிமுத்து . க. செ.

Sunday, July 4, 2010

என் கவிதைகள் ?

என் கவிதைகள் ?
கவிதைகள் என்று கர்வபட்டுக்கொள்ளும் இலக்கிய அறிவு இல்லை. அப்படிச் சொல்லத் தேவையான தகுதி பற்றிய படிப்பும் கிடையாது. தமிழும் தடுமாறும். காசுக்கு கோலிக் குண்டும், கள்ளன் போலிசும், கம்பு தள்ளியும், பம்பரமும் விளையாடிக்  காலந்தள்ளும் பள்ளிக்கூடப்  பருவத்தில் என்னை அடையாளப்படுத்திக்   கொள்ள, அவஸ்தைப் பட்ட அந்தத் தருணங்களில், அத்தியாவசியமான அரவணைப்பும் , திட்டமிட்ட வழிகாட்டலும் , இலக்குத் தெரிந்த பயணமும் இல்லாத, தொலைக்காட்சியும் தொலைவில் இருந்த ,படம் பார்க்கும் பழக்கமில்லாத அந்தப் புழுக்கத்தில் எட்டாக்கனி என எல்லாமும் இருந்த ஒரு வெம்மையில் சிக்கி இந்தப் பழம் புளிக்கும் என புறம் தள்ள முடியாத வெளிப்புற உலகின் தாக்கத்தில் தகித்து தட்டுத் தடுமாறிய என் உணர்வுக்கு உடனிருக்கும் உற்ற நட்பில்லாத் தனிமையில் சிந்திய சிந்தனை சிதறல்களின் வார்த்தை வடிவங்கள் இவை. சிந்தனையைச் சீர்பிரித்துப் பாவாக்கித் தலைப்புகளுக்குத்  தலையை உடைக்காமல் தான் தோன்றித் தனமாய் தடித்தனமாய் உணர்வுப் பெருக்கத்தின் வடிகாலாய் ஜிப்பரிஸ் தியானமாய் எழுதப்பட்டவை. எண்ணிக்கைக்காக எழுதியவை அல்ல இவை. எழுத முடிந்ததும்  இல்லை. அவ்வாறு பகிரிந்து கொள்ளப் பக்கத்தில் படித்தவர்கள் இல்லை. படித்தவர்கள் பக்கம் இருக்கும் பாதையும் தெரியவில்லை. பத்திரப் படுத்தியதை பறித்துப் படித்தவர்கள் பாராட்டாய்ச் சொன்ன பொழுது பாட்டெழுதப் பலர் பாட்டுக்களைப் படித்து பள்ளிக்குடப் பாடப் புத்தகங்களில் மீண்டும் பழைய நேர் நேர் தேமா எனப் படித்துப் பயந்து பாதியிலேயே விட்டு, பலமுறை நப்பாசையாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அடுத்த இதழ் பற்றிய அக்கறையில்லாமல் அர்த்தராத்திரியில் அரைகுறைத் தூக்கத்தில் அன்றைய தினத்தின் கனம் குறைக்க சொறிந்து கொண்ட குரங்குப் புண்ணாய், பலவீனத்தால் வெளிப்பாடுகளை வெட்ட வெளியில் கொட்ட முடிய கையாலாகாத்தனத்தால் பயிற்சி செய்யும் பத்தியமும் படியாமல் வழிப்படுத்த வகை தெரியாத வயதுக்  கோளாறுகளின் வடிகாலாய் வடிந்தவைகளைக் கவிதைகள் என்று சொல்லாமல் கதறல்கள் என்று சொல்லலாம். கவிதைகள் என்று சொல்வது அடையாளத்தின் பொருட்டே . எனவே அந்தக்  கேள்விக்குறி.
பா படிக்காமல்
சீர் பிரிக்காமல்
சிந்திடும் இவை
என்
சிந்தனைச் சிதறல்கள்
நீர்
சிரிக்காமல் சீர்தூக்கி
சிறப்பு செய்திட
செழித்திடுவேன்  யான்
சீரும் சிறப்புமாய்.

கட்டிமுத்து.

THE MENTAL SHEATH

MAN IS ONE WHO OWNS THE MIND, THE THIRD SHEATH. FEELING IS THE FUNCTION OF THE MIND. NO CREATURE FEELS SO INTENSELY AS MAN DOES. FEELING IS BOTH POSITIVE AND NEGATIVE. HAPPINESS IS POSITIVE AND SORROW NEGATIVE. LOVE IS POSITIVE AND HATRED NEGATIVE. POSITIVE EMOTIONS PROMOTE HEALTH AND GROWTH. NEGATIVE FEELINGS DESTROY THEM. THE MENTAL SHEATH MAKES OR MARS MAN'S CAREER. HE WHO HAS MASTERY OVER THE MIND IS THE MONARCH UNTO HIMSELF. KATTIMUTHU.K.C.

காதல்

காதலாய்
நானிருக்கும் போது
காதல்
என்று
எதனை  சொல்ல ...

கட்டிமுத்து.க.செ.

READ SPB POST

DEAR MINE, READ SPB POST (SUCCESS-PEACE-BLISS) PUBLISHED ON EVERY TENTH OF THE MONTH. YOU CAN SUBSCRIBE TO GET YOUR OWN COPY. ANNUAL (12 ISSUSES) SUBSCRIPTION IS RS.120 ONLY.

BE AN INDIVIDUAL

BE AN INDIVIDUAL IF YOU REALLY WANT TRUTH TO HAPPEN TO YOU. TAKE ALL THE RISKS THAT ARE NEEDED TO BE AN INDIVIDUAL, AND ACCEPT THE CHALLENGES SO THAT THEY CAN SHARPEN YOU, CAN GIVE YOU BRILLIANCE AND INTELLIGENCE. KATTIMUTHU.K.C.

Friday, July 2, 2010

WELCOME

LOVE DEMANDS THE IMPOSSIBLE. IT SAYS : ON THE FIRST STEP YOU HAVE TO DROP THE EGO. LET US SHARE AND SHINE. KATTIMUTHU.K.C.